பேட்டரி நிற்காத அன்ராய்டு போன்களை என்ன செய்யலாம்?


     அன்ராய்டு போன்களை பொறுத்தவரை அவற்றுக்கு பேட்டரி நீடித்து நிற்பது தான் தலையாய பிரச்சனை ஆகிறது. காலை பேட்டரி முழுவதும் நிரப்பிக்கொண்டு சென்றால் மாலைக்குள் தீர்ந்து நின்று விடுகிறது. அதற்கு பிறகு வீட்டிற்கு வரும் வரை தொல்லைதான் சாதாரண எம்டிகே 6217, 6215 போன்கள் கூட 3 நாளைக்கு பேட்டரி தாங்கும் போது 10000 மதிப்புள்ள ஜெல்லிபீன் போன்கள்  சார்ஜ் நிற்காமல் போவதற்கான காரணத்தை ஆராய்ந்த போது எளிமையான சில விஷயங்களே இவ்வாறு பேட்டரியை காலி செய்கின்றன. அவற்றை விரிவாக காணலாம்1. முதலில் பேட்டரி பயன்படுத்தும் மென் பொருட்களை கண்டறிந்து அவற்றை நிறுத்தி வைக்கும் மென் பொருட்களை
அன்ராய்டில் நிறுவ வேண்டும். எடுத்துக்காட்டாக Battery Booster மென் பொருளை நிறுவலாம்.இவ்வகை மென்பொருட்கள் பேட்டரி குறைக்கும் அப்ளிகேசன்களை அவற்றை பயன்படுத்தாத போது நிறுத்தி வைக்கும். வைபை, புளூடுத் ஆகிய அப்ளிகேசன்களை அவற்றை பயன்படுத்தாத போது நிறுத்தி வைக்கிறது. 

2. மார்கெட்டில் அப்ளிகேசன்களை பதிவிறக்கம் செய்யும் போது அவற்றுக்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை முழுமையாக படித்து அதனுடைய மெமரி கொள்ளளவு, பேட்டரி பயன்படுத்தும் விதம் ஆகியவற்றினை அறிந்து கொள்ள வேண்டும். 

 3. பேட்டரி பயன்பாட்டியல் அப்ளிகேசனை கொண்டு எந்த அப்ளிகேசன் எவ்வளவு பேட்டரி சாப்பிட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவும், தேவையற்ற அப்ளிகேசன்களை நிறுத்தி வைக்கவும் இவ்வகையான பயன்பாட்டியல் மென்பொருள் அன்ராய்டிலேயே இணைக்கப்பட்டுள்ளது.4. பேட்டரியை அதிகம் உறிஞ்சும் அதிகம் பயன்படுத்தாத அப்ளிகேசன்களை டிசேபிள் செய்து கொள்ளலாம். இதன் வாயிலாக எளிமையாக அன்ராய்டு போன்களின் பேட்டரியை நீண்ட நேரம் நீடித்து வைக்க முயற்சிக்கலாம். பதிவு பயனுள்ளதாக இருப்பின் பின்னுாட்டம் இடவும்.Previous
Next Post »