​பைல்க​ளை காப்பி ​செய்வதற்கு முன் கவனிக்கவும்!!!


பொதுவாக விண்டோசில் வழக்கமான copy-paste முறையானது வழக்காமான பாணியிலேயே காணப்படும். அதில் காப்பி செய்யப்படும் போது எவ்வளவு நேர்த்தில் முடியும், மற்றும் Cancel பட்டன்கள் மட்டுமே இருக்கும். கோப்புகளின் வகை எவ்வளவு வேகத்தில் பைல்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றது, போன்ற அட்வான்ஸ் விவரங்கள் இருக்காது மேலும் நிறுத்தி வைத்தல் போன்ற மேம்பட்ட வசதிகள் காணப்படாது. பொதுவாக வின்டோசில்
காப்பி பேஸ்ட் விசுவல் இப்படித்தான் காணப்படும்.


copy-paste விசுவல் மாற்றவும், வேகமாக copy-paste செய்யவும் இங்கே 2மென்பொருட்களை பற்றி பார்க்கலாம்.

Tera Copy பைல்களை யூசர் அதிகபட்ச வேகத்தில் நகர்த்த நகலெடுக்க பயன்படுகின்றது. இது நிறுவப்பட்டவுடன் வின்டோசின் copy-paste வேலைகளை தன்னகத்தே எடுத்துக் கொள்கிறது. நிறுவியதற்கு அடுத்து செய்யும் அனைத்து காப்பி பேஸ்ட்களும் இதன் கட்டுப்பாட்டிலேயே இயங்குகிறது.


Tera Copy அதிகபட்ச வேகத்தில் பைல்களை நகலெடுக்கிறது. எடுத்தகாட்டாக கீழ்கண்ட பைல் நகலெடுக்கலின் போது வின்டோஸ் 3 எம்பி வேகத்திலும் Tera Copy 9 எம்பி வேகத்திலும் நகர்த்துகிறது.
ExtremeCopy யும் டெரா காப்பி போன்றே கோப்புகளை நகர்த்தல் மற்றும் நகலெடுத்தலின் போது வேகத்தை அதிகரிக்க பயன்படுகிறது. இதுவும் நிறுவியதற்று பின்னர் காப்பி பேஸ்ட் வேலைகளை தன்னகத்தே எடுத்துக் கொள்கிறது. 

மேற்கண்ட பைல் நகலெடுத்தலில் ExtremeCopy 8.50 எம்பி வேகத்தில் செயல்படுகிறது.

ExtremeCopy டவுன்லோடு செய்ய!

(கவனிக்கவும் - காப்பி - பேஸ்ட் மென்பொருட்கள் வேகமாக வேலை செய்தாலும் பெரும்பாலான நினைவகத்தினை எடுத்துகொள்ளும் 
வாய்ப்பும் காணப்படுகிறது)

Previous
Next Post »