5 வருடத்தில் தாஐ்மகால் அழியுமா???  உலக அதிசயங்களில் முதலாவது அதிசயமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டது நம் நாட்டின் காதல் சின்னமாக விளங்கும் தாஐ்மகால்( tajmahal and next 5 years>)...


  தாஐ்மகாலின் தற்போதைய வயது 358. ஆக்ரா வில் அமைந்துள்ளது யமுனை நதிக்கரையில்.

 அமில மழைக்காரணமாக தாஐ்மகால் அழியும் அதாவது அதன் பளிங்கு தன்மை மறையும் என்று பத்து வருடங்களுக்கு முன் ஒரு பரபரப்பான தகவல் உலவி அதனை காக்க அதன் அருகில் இருந்த அனைத்து தொழிற்சாலைகளும் புகையினை குறைத்து வெளியிடுமளவு பண்படுத்தப்பட்டன.

  ஆனால் யமுனை நதியில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகளை யாரும் கவனிக்காமல் விட்டுவிட்டனர் போல... அந்த காலத்தில் தற்போது நாம் அடிதளமாக கருங்கற்களையும் சிமண்டையும் உபயோகிப்பது போல்... பெரிய பெரிய கட்டைகளை தாஐ்மகாலினை கட்ட அடிதளமாக உபயோகித்துள்ளனர்... விளைவு இன்னும் 5 ஆண்டுகளில் காதல் சின்னம் கண்டமாக போகிறது என்பதுதான்...

   இதற்கு காரணம் யமுனை ஆற்றின் அசுத்தம் என்று ஆய்வாளர்கள் அளறினாலும் எனக்கென்னமோ காதல் கூட களைந்து விடும் என்பதை தெரிவிப்பதற்காகதான் ஷாஐகான் மரமேடை மீது தாஐ்மகாலை கட்டினால் என தோன்றுகிறது...

உங்களுக்கு என்ன தோன்றுகிறது? 
Previous
Next Post »