கூகுள் எர்த் 10 மில்லியன் பதிவிறக்கங்களை கடந்தது...நேற்றைய தினம் கூகுள் எர்த் தனது 10 மில்லியனாவது பதிவிறக்கத்தினை அளித்துள்ளதாக அறிவித்துள்ளது...

கூகுள் மேப்பை விட பன்மடங்கு வசதியான ஆனால் கூகுள் மேப்பை பிட குறைவான இட அமைவிடங்கள் குறிக்கப்பட்ட ஒரு ஆன்லைன் அப்லிகேஷன் தான் கூகுள் எர்த்...

கூகுள் மேப் ஒரு இருபரிமாண அமைவிட தேடல் என்றால் கூகுள் எர்த் செய்வது ஒரு முப்பரிமாண அமைவிட தேடல் களமாகும்...

ஒரு சிறிய கோலி குண்டு அளவுள்ள உலகம் முதல் ஒரு காரினை கூட காட்டும் அளவு திறமையான முப்பரிமாண அதாவது அதில் தேட ஆரம்பித்தால் நாமே அந்த இடத்தில் ஒரு வானூர்தியில் சென்று பார்வையிட்ட அளவுக்கு தெள்ளத்தெளிவான ஒரு அற்புத அனுபவத்தினை தருகிறது இது...

ஒரு வீடியோ கேம் விளையாடுவது போலதான்... மேலே-கீழே - இடம் - வலம்- பக்கம் மேல் -பக்கம் கீழ் என இந்த ஆறு விசைபலகை விசைகளை அழுத்தினாலே நம்மால் உலகை ஒரு வலம் வந்துவிடமுடியும் என்பதுதான் இதன் சிறப்பு

ஏற்கனவே சென்ற போஸ்டிங்கில் கூறியது போல நம் வீட்டினையும் சன்னல்வழியாக ஊடுருவி பார்த்துவிடுமோ என்ற சந்தேகத்தினை கூட ஏற்படுத்தி விடும் அளவிற்கு அறிவியலின் அற்புதத்தினை கண்முன் காட்டி விடுகிறது இந்த அப்ளிகேஷன்..

ஸ்கெட்ச்அப் என்ற அப்ளிகேஷன் மூலம் நம்மால் கூட நம் வீட்டை அழகாக முப்பரிமாண அமைப்பில் அமைத்து இதில் விட்டுவிடலாம் என்பதுதான் இதன் சிறப்பு...

பல லட்சம் கொடுத்து உலகை ஒரு வலம் வர நினைப்பவர்கள் கொஞ்சம் இதை உலவி பாருங்கள் உலகை சுற்றும் ஆசை ஒரு மணி நேரத்தில் நிறைவேறிவிடும்...

Previous
Next Post »