Utorrentz - ல் லாவகமாக கோப்புகளை பதிவிறக்கம் செய்வது எப்படி? முன்னதாக குறிப்பிடப்பட்டுள்ள bit torrentz போலவே utorrentz ம் தனது பதிவிறக்க சக்திகளை பகுதி பகுதிகளாக பிரித்து பல்வேறு சர்வர்களுக்கு பகிர்ந்தளிக்கும் தன்மையினை கொண்டதொரு உலகலாவிய பதிவிறக்கர்களால் பெரிய அளவில் பயன்படுத்தப்படும் ஒரு பதிவிறக்க இணைய பகுதியாகும்.

இதனை உபயோகிப்பதால் உள்ள நன்மைகள்


 1. சர்வர் உபயோக மிகுதி காரணமாக பாதியிலேயே http இணைப்பு துண்டிக்கப்படுவது கிடையாது 
 2. நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் இவ்வகை பதிவிறக்கத்தினை விட்டுவிட்டு அதாவது நிறுத்தி நிறுத்தி செய்து கொள்ளலாம்.
 3. தமிழ்நாட்டில் அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்பட்டு கொடுக்கப்படுவதால் இவ்வகையான பதிவிறக்க முறையே சிறப்பானதாக பயனுள்ளதாக இருக்கும்.
 4. இது A முதல் Z வரை அனைத்து பதிவிறக்க தன்மை வாய்ந்த மென்பொருட்கள் - படக்காட்சிகள்- இசைத் தொகுப்புகள் - பல வகை கோப்புகள் ஆகியவற்றை நன்கு தொகுக்கப்பட்ட ஒரு நிலையில் கொண்டிருக்கின்றன.
 5. வியாபாரத்தில் win-win சூழ்நிலை என்று கூறுவார்களே அதனை இந்த அமைப்பு முறையிலான பதிவிறக்கச் சூழலில் நம்மால் காணமுடியும். 
 6. உங்கள் இணையதள இணைப்பின் முழு வேகத்தன்மையினையும் இந்த utorrentz ல் பயன்படுத்த முடியும்.
 7. os softwares with key இதில் கிடைக்கும்
 யுடொரண்ட் பயன்படுத்தும் முறை

  முதலில் கீழே கொடுக்கப்பட்ட பதிவிறக்க இணைப்பை கிளிக் செய்து

யு டொரண்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள...

இந்த சிறிய யுடொரண்ட்  மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் பின் அதனை ரன் செய்து தங்களின் கணினியில் நிறுவிக் கொண்டு முடிவு பொத்தானை அழுத்தினால் அது தன் window ஐ திறந்துக் கொள்ளும்.

பிறகு அதில் உள்ள தேடு பகுதியை பயன்படுத்தி நமக்கு தேவையான தேடல் சொல்லை உள்ளிடலாம் அல்லது கூகுள் சர்ச் லும் utorrent search என்ற இணைப்பினில் சென்று தேடலை தொடங்கலாம்

தேடியவுடன் search engine கள் அளிப்பது போல் அதன் சம்மந்தமான அனைத்து கோப்புகளும் நமக்கு காட்டப்படும்

அங்கு peers seeders என்ற இருவகை முறைமைகளை நம்மால் காணமுடியும்

அதிகமான seeders இருந்தால்தான் நமக்கு நல்லது பைல் அதிக வேகத்தில் அதாவது நமது இணையதளத்தின் முழு வேகத்தினையும் பயன்படுத்திக் கொண்டு இடையில் எந்த ஒரு ஏற்றத்தாழ்வான இணைப்பு சக்தியும் வீணடிக்கப்படாமல் விரைவாக பதிவிறக்கத்தினை செய்யும்.

அதுவே அதிகமான leeches இருந்தால் அந்த பைல் அந்த அளவுக்கு பதிவிறக்கம் ஆகாது அது மொத்தமாக முடிவடைய சிறிது நேரம் தள்ளி போகலாம்.

இதற்கு காரணம் நாம் அந்த பதிவிறக்க இணைப்பை பயன்படுத்துகையில் நமது சர்வரும் அதனை பதிவிறக்கத்தினை அந்த நேரத்தினில் செய்கின்ற பலருக்கு நமது பதிவிறக்கத்தின் சிறு துண்டுகளை upload செய்து கொண்டிருப்பார்கள்.

 எனவே நாம் அதிகமான peers அதாவது நாம் டொரண்ட தேடல் பொறியில் (கூகுளில் torrentz என தேடி அங்கு அதற்கான இணைப்பினை பெறுங்கள்) உள்ள இணைப்புகளை கிளிக் செய்து அதில் பச்சை நிறத்தில். எண்ணுரு வானது வலது புற பகுதியில் தெரியும்.

அதிகமான எண்ணுருவினை கொண்ட link களே நல்ல link கள் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும் அது மட்டும் அல்லாமல் அந்த ஒரு link க்கு அருகிலேயே பச்சை நிறத்தில் ஒரு சரி குறியீடும் இருக்கும அதுவே  வைரஸ் சோதிக்கப்பட்ட  பாதுகாப்பான ஒரு இணைப்பாகவும் கொள்ள வேண்டும்.

பின் நாம் நினைவில் கொள்ள வேண்டுவன....

 1. நமக்கு தேவையான தேர்வு எந்த link ல் உள்ளது
 2. அது அதிகமான seeders ஐ கொண்டிருக்கிறதா 
என்பதுதான்

பின் அந்த link மீது கிளிக் செய்தால்
படத்தில் உள்ளது போன்ற பல்வேறுபட்ட torrentz பதிவுகளின் பெயர்கள் அதாவது Utorrentz, bittorrentz, torrentzfunk, lime torrentz என பலவகையிலான பகுதிகளை நாம் காணலாம் ஆனால் நாம் நினைவில் கொண்டு செயல்பட வேண்டியது torrenthound.com என்ற தொரு இணைப்பினை தான்.


பின் அதனை கிளிக் செய்து கொண்டுதற்போது அதில் காட்டப்படும் வட்டத்தினை உற்று நோக்க வேண்டும் அதில் அதிகமான பச்சை நிறம் இருந்தால் அது நல்ல torrentz என்பதும் அதிகமான மஞ்சள் அவ்வளவு சீக்கிரமாக பதிவிறக்கம் ஆகாது என்பதையும் குறிக்கும்.

இப்போது 80% அதற்கு மேலான seeders உள்ள இணைப்பே சிறப்பானது என கருதிக் கொண்டு பின் Download. torrent என்ற இணைப்பினை கிளிக் செய்தால் அது ஒரு .exe  file போல பதிவிறக்கம் ஆகிவிடும். பின் அதனை கிளிக் செய்தால் அது நாம் முன்னதாக பதிவிறக்கம் செய்து நிறுவியுள்ள Utorrent ல் தனது பதிவிறக்கத்தினை செய்யத் தொடங்கி விடும் அவ்வளவுதான்.


இதிலும் சில நுணுக்கங்கள் உள்ளன....


 1. இவ்வகையான பதிவிறக்கத்தினை செய்யும் போது நாம் எந்த நேரத்திலும் பதிவிறக்கத்தினை Pass செய்து கொண்டு மீண்டும் restart செய்து கொள்ளலாம்.
 2. பதிவிறக்கத்தினை முடித்த பின்பு அந்த பதிவிறக்க பைலை Utorrentz இணைப்பிலிருந்து நீக்கம் செய்வதே சிறப்பு, இல்லாவிடில் Uploading speed அதிகரித்து உங்கள் downloading தன்மை பாதிப்படையும்.
 3. முன்னதாக கூகுள் torrent search ல் பதிவிறக்கம் செய்யப்பட்ட .exe தன்மையிலான பைல் என்று சொன்னேனே அதனை பத்திரமாக வைத்திருக்கவும் உங்களையும் மீறி பைலினை பதிவிறக்கம் செய்யும் போது அதனை நீக்கிவிட்டால் அந்த torrentz இணைப்பினை கிளிக் செய்தால் போது அது மீண்டும தன்னை பழைய நிலையிலிருந்தே மீட்டுருவாக்கம் கொண்டு செயல்படத் தொடங்கி பதிவிறக்கத்தினை நல்ல முறையில் முடித்து வைத்துவிடும். 


Previous
Next Post »

1 comments:

Write comments
September 4, 2011 at 12:47 AM delete

Intha torrent nutpam bittorrent ku sontham thozhare. athanai payanpaduthum innoru vadivam than Utorrent.

Linus Benedict Torvalds linux'i kandarinthalum, linux yappadi Yarukkum sontham illaiyo appadithan. nam kuda thiramai irunthal intha protocol kondu "jacknz" yantru oru application uruvakki torrent file galai pathivirakkam seiyalam.

utorrent, bittorrent 2 m Men porutkal. torrentprotocol patriyathu than munthaiya pathivu.

Reply
avatar