முடிஞ்சது sms கொண்டாட்டம்!!!
   TRAI என்னும் இந்திய அரசின் தொலைதொடர்பு கட்டுபாட்டு அமைச்சகம் செப்டம்பர் 2011 - 27 ஆம் நாள் முதல் ஒரு அலைபேசி எண்ணிலிருந்து 100 குறுஞ்செய்திகளை மட்டுமே ஒருவரால் அனுப்ப முடியும் என்றதொரு புதிய கட்டுபாட்டினை விதித்துள்ளது.

  இது செப்டம்ர் 25 முதலே தொடங்கப்பட்டு விட்டதாக ஏர்டெல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து ஏற்கனவே உள்ள பூஸ்டர் பேக்குகளையும் விழுங்கி விட்டது.

  இணைய தள மூலமாக நடைபெறும் குறுஞ்செய்தி நடவடிக்கைகளுக்கும் way2sms, 160by2 போன்றவற்றிற்கும் இவ்வகையான முட்டுக்கட்டைகள் இடப்பட்டுவிட்டனவாக செய்திகள் வெளியாகி உள்ளன...

  ஆரம்ப காலத்தில் இலவச சேவையாக வழங்கப்பட்ட குறுந்தகவல் சேவை இன்று பைசாவுக்காக மாறி அதுவும் ஒரு நாளைக்கு 100 தான் என்ன அளவினை அடைந்து விட்டது...


  யார்தான் அந்த பெரிய உள்நோக்க கருத்தாக... ஒரு ஆளுங்கட்சியையே ஆட்டுவிக்கும் வலிமை ஒரு குறுஞ்செய்திக்கு உண்டு என்பதை கூறிவிட்டார்களோ தெரியவில்லை... கொடுங்கோல் ஆட்சிக்கு ஒரு படிக்கல்லாக தான் இவ்வகையான நடவடிக்கைகள் ஒரு ஆழ்ந்த சிந்தனையாளனுக்கு தெரியும் என்பதனை நாம் மறுக்க கூடாது.

  என்னடா ஒரு சாதாரண குறுஞ்செய்திதானனே அது என்ன செய்ய போகிறது என்கிறீர்களா?  ஒரு நாட்டின் ஆட்சி பொறுப்பினையே மாற்றும் மக்களின் மனசாட்சி யாருக்கும் கீழ்படியாத (மீடியாக்கள் கூட பொய் சொல்லலாம் ) ஆனால் குறுஞ்செய்திகள் பொய்சொல்லாது..

  அதனை தானே இந்த சட்ட மன்ற தேர்தலில் நாம் கண்கூடாக கண்டோம் தமிழ்நாட்டில்?

  இன்னும் ஏன் தாமதம்?  விளம்பர குறுஞ்செய்திகள் தான் இந்த தடை உத்தரவிற்கான காரணம் என்றால் நடுரோட்டில் ஆபாச விளம்பரங்களால் பள்ளி மாணவர்கள் மன சஞ்சலம் அடைகிறார்களே அதன் பெயர் என்ன?

  சர்வாதிகார ஆட்சி முகமைக்கு ஒரு திறவு கோளான இந்த நடவடிக்கையினை ஒரு வீரமுள்ள சமூக பொறுப்பாளனாக நாம் எதிர்ப்பது என்பதே உத்வேகமுள்ள ஒரு குடிமகனின் கடமையாக அமையும்.

 
   இதெல்லாம் தொலைதொடர்பு வசதியே வேண்டாம் என்று எண்ணத்தினை நம் மனதினில் விதைக்கின்றன..

  சரி பார்ப்போம் இந்த சட்டம் எத்தனை நாட்கள் நீடிக்கின்றன என்று...சிந்திப்பீர் செயல்படுவீர்!

பொதுநல வழக்கு போட யாராவது முன்வருவீர்களா????
Previous
Next Post »

4 comments

Write comments
pravin
AUTHOR
September 26, 2011 at 2:36 AM delete

total wast naasama poka trai

Reply
avatar
September 26, 2011 at 4:32 AM delete

விடுங்க பர்வின்...

Reply
avatar
Vijayakumar A
AUTHOR
September 26, 2011 at 5:32 AM delete

Yappa.......... Ipa Than Konjam Happy Ah Irku...

Reply
avatar
September 26, 2011 at 7:12 AM delete

ayyayo avangala neenga... @ vijayakumar.A

Reply
avatar