Hulu - ஒரு பூதாகாரமான இணையத் தொலைக்காட்சி


      Hulu ஒரு விருப்பமான படங்களை காணுவதற்கான இணையமாகும்.  தற்போது ஐரோப்பிய நாடுகளில் பரவலாக படம் பார்க்க பயன்பட்டு வருகிறது உலகம் முழுவதும் You tube இருப்பது போல. ஆனால் இதில் முழு நீளப் படமும் flash video  தன்மையில் Youtube ல் உள்ளதை போலவே 288p முதல் 720 HD  வரையில் நமது இணையத்தின் வேகத்தின் அடிப்படையில் இணைப்பு கிடைக்கும்படியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

  Hulu தனக்கான வீடியோக்களை AOL, MSN, MYspace, Facebook, Yahoo! மற்றும் comcast’s xfinityTV ஆகியவற்றிடமிருந்து பெற்று விநியோகம் செய்கிறது.

  இதன் சந்தை மதிப்பானது Fox Entertainment group , Disney-ABC Television Group , Providence Equity Partners ஆகியோருக்கு பகிரப்படுகிறது.




     2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இணையம் AOL, MSN, FaceBook, Yahoo ஆகியவற்றுடன் ”முதல் பகிர்வு தன்மையினை” வைத்துக்கொண்டு மார்ச் 12, 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தன் ஒளிபரப்பினை அதாவது நமக்கு பிடித்தமான படத்தினை முழுமையாக காணும் வசதியை ஏற்படுத்தி தந்தது.

     இதன் Access denied for particular Region  கோட்பாட்டின் படி தற்போது சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் இதன் இணைப்புகள் கிடைக்கப்பட்டு சக்கை போடு போட்டு வருகின்றன.


    Hulu Plus தனது மாதாந்திர கட்டணத்துடன் Beta சந்தாதார ர்களை தற்போது ஈர்த்து வருகிறது. இது சூன் 29 2010 அன்று ஆரம்பிக்கப்பட்டது.  ஆனால் இதிலும் இலவச hulu இணைப்பினில் உள்ளது போன்ற விளம்பரங்களை தன்னிடம் கொண்டிருந்தாலும் அதிகபடியான வீடியோ பதிவுகளால் இது மாதாந்திர சந்தாவினை வசூலிக்கும் அளவிற்கு வந்துள்ளது.

      இன்று அனைத்து இணைய தொடர்பு கொண்டு இருக்கும் தொழில்நுட்ப சாதனங்களிலும் Hulu உட்புகுந்து வருகிறது.

         நமக்கு தொலைக்காட்சி பார்க்கவே நேரம் இல்லை இதில் இணையதள தொலைக்காட்சி வேறா எனக் கேட்பவர்கள் யாரேனும் இருந்தால் கேட்கலாம்......


   மேலும் நம்நாட்டிற்கு இது வர வாய்ப்புகள் குறைவுதான் என்பது என்கருத்து. நம்நாட்டில்  மேலே குறிப்பிட்டது போல ”நமக்கெல்லாம் தொலைக்காட்சி பார்க்கவே நேரம் இல்லை” என்பது ஒருபுறம் இருந்தாலும் ”இதன் கட்டண தன்மையும் இதன் வரவை முட்டுகட்டைபோட வைத்துவிட வாய்ப்புகள் உண்டு”.
                                             
                                               - jacknth

Previous
Next Post »

2 comments

Write comments
January 25, 2012 at 8:14 AM delete

தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகும் பழைய post களை பதிப்பு பெயர் மாற்றாமல் விட்டமைக்கு நன்றி...

Reply
avatar
January 26, 2012 at 7:42 AM delete

neenga than post podurathu ila jagan

Reply
avatar