மனித இனம் நினைவாற்றலை இழக்க - இணையம் காரணமாகுமா!


        இன்று இணைய யுகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் நாம்.


           பண்டைய காலங்களில் புராணங்கள் இதிகாசங்கள் என்று ஏதோ இந்த கால அரிபார்டர் படங்கள் போல் தம் இஷ்டத்திற்கு கற்பனையை அள்ளி விட்டிருக்கின்றன.


           கற்பனையை செயற்படுத்தும் ஆற்றல் மனிதனுக்கு கைவந்த கலை போல...
நான் இங்கு கூற விழையும் செய்தி பலருக்கு புதிதாக தோன்றலாம் ஆனால் அதுதான் உண்மை...


        மனிதனின் சிந்தனை ஆற்றலும் செயல் ஆற்றலும் இணைந்து கற்பனைக்கெட்டாத பல ஆச்சரியங்களை செய்து கொண்டிருக்கின்றன.

மயில் வாகனங்கள் - விமானங்களாகியது.
மை போட்டு முகம் பார்ப்பது - செல்லிடத் தொலைபேசியானது.
மாய மந்திரங்கள் - இணையமானது.
         இன்னும் ஆகாத ஒன்று நினைத்த நொடியில் இப்படி மறைந்து அப்படி வேறு இடத்திற்கு தாவுவதுதான்.


விளைவு... எளிமையான வாழ்க்கை...


ஆம் நாம் சோம்பேறிகளாகி போனோம் என்பதுதான் உண்மை.


மிக்ஸியும் கிரேண்டரும் வாஷிங் மெஷினும் என நமது உடல் உழைப்பினை திருடி நம்மை உடல் ரீதியாக சோம்பேறிகளாக்கிவிட்ட நிலையில்...
தொலைக்காட்சி நம்மை உள ரீதியில் சோம்பேறிகளாக்கி விட்ட நிலையில்...


இணையம் - மனிதனை எதனையும் மூளையில் தேக்கி வைக்க கூட முடியாத நிலையில், சோம்பேறிகளாக்கி வருகிறது என்பதுதான் அப்பட்டமான உண்மை...


      காரணம், ஒரு விசைபலகையில் சில தட்டுகள் தட்டினால் எல்லாம் வந்து கொட்டிவிடும்.  இந்த சூழலில் நினைவினில் பல குப்பைகளை நாம் ஏன் கொண்டிருக்க வேண்டும்? என்றதொரு அசட்டுத்தனம்.


      இப்படியே போனால்.... பரிணாம வளர்ச்சியில் நாம் வாலினை இழந்த கதைதான் - நம் மூளைக்கும் ஏற்படும் என்பதனை நாம் உணர வேண்டும்.


          இது சாதாரண விஷயமாக தோன்றலாம்!. ஆனால், இதன் பின்னணியில் உள்ள பயங்கரங்களை நாம் உணர்ந்து பார்க்க வேண்டும்.


        அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு இணையம் பயன்பட்டு வரலாம், புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த.  ஆனால், அவர்கள் ஒவ்வொரு முறையும் "இந்த நிலையால் இந்த நிலை ' என்று ஒவ்வொரு வாக்கியமாக படித்து படித்து பார்த்து கண்டுபிடிப்பினை நிகழ்த்த முடியுமா?


      அப்படி இருந்தால் எப்படி இருக்கும் ? அந்த நிலைதான் ஏற்படும்.. மனித குலத்திற்கும்.


          இன்று நம்மில் இருக்கும், நம் நினைவாற்றல் என்பது... பல்லாயிர காலமாக நம் முன்னோர் செவிவழி செய்திகளால் மட்டுமே தம் வரலாற்றை கடத்த முற்பட்டதால் வந்த விளைவாகும்.


             உடலியக்க சோம்பேறிதனத்தால்! ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் மனிதனின் நிலையினை வாலி (wall e) என்ற ஆங்கில கார்டுன்  படத்தினில் தெளிவாக அறியலாம். ஆனால், அதனை விட மோசமாக, அதனுடன் மூளையின் செயல்முறைமைகளும் பாதிப்படைந்தால் என்னவாகும்!


           என் வாழ்வினை கூட எடுத்துக்காட்டாக சொல்லலாம்... இணையத்தினை பயன்படுத்தாத வரை நான் தூங்க தொடங்கிய உடன் தூங்கிவிடுவேன் ஆனால் இன்று இரவில் பல முறைகள் என் தூக்கம் களைகிறது எதையாவது சிந்திக்க தோன்றுகிறது.


          இதற்கு காரணம் மனதினை ஒருநிலை படுத்த தியானம் தேவைபடுவதை போல, மனதை களைக்க இணையம் பயன்படுகிறது எனலாம்.


          தேடல்! ... எதையாவது தேடு! என்று ஓடிக்கொண்டிருக்கிறது மனம் இதன் விளைவே தூக்கமின்மை என்று நான் கருதுகிறேன்.


          இது மட்டுமா சமூக வளைதளங்களின் போதையில் திக்குமுக்காடி கிடக்கிறது நம் மனம்...


           யார் எந்த நேரத்தில் நம் போஸ்ட் க்கு கமாண்ட் செய்திருப்பார்கள் என்று பார்க்கவே மனம் துடியாய் துடிக்கிறது... விளைவு அதையும் நான்தான் கூற வேண்டுமா! உங்களுக்கே தெரியுமே!
          பண்டைய கால கல்வி முறைமைகள் யாவும் முதலில் மனனம் ஏன் முடிவும் மனனம் என்னும் நிலையினை கையாண்டன.


         தமிழில் பல இலக்கியங்கள் தோன்றகூட இந்த மனனம் என்னும் முறைதான் காரணமாக இருந்திருக்க வேண்டும். இன்றும் நாம் செய்யுளை மனனம் செய்வதன் பயனாக பலவகை பொருட்களை எளிமையில் மனனம் செய்யும் திறனை பெற்றவர்களாக இருக்கிறோம் என்பதனை மறுக்க முடியாது.


             இப்படியிருக்க எல்லாம் ஒரு கிளிக்கில் கிடைத்து விடுகிறது என்பதற்காக நாம் இணையத்தினையே சார்ந்திருப்பது நமது மூளையினை நாம் சோம்பேறிகளாக்குகிறோம் என்பதனை உணர வேண்டும்.


          ஏற்கனவே கணிப்பான் என்றதொரு கருவியால் 5 உடன் 9 ஐ கூட்டினால் என்ன வரும் என்பதை கூட கணிக்க நம் கை கணிப்பானை தேடி வருவதை யாரும் மறுக்க முடியாது.


         நம்மில் திறமை இருக்கலாம் ஆனால் எளிமை என்றதொன்று இருந்துவிட்டால் அந்த போதை கடினங்களை மறக்கடிக்க செய்துவிடும் ... விளைவு இழப்பு...

  மனித மூளையால் உருவான பொருளே!  மனித மூளையை அழிக்க விடலாமா? 


         இதை உணர்ந்து செயல்படுவோம்! ... மனித குலத்தின் மாபெரும் கொடையான நினைவாற்றலினை காத்திடுவோம்!.


பின்னூட்டங்களை அளியுங்கள்... நன்றி!Previous
Next Post »

1 comments:

Write comments