இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவது எப்படி்?

இன்றைய நவீன உலகில் அனைத்து மனிதர்களாலும் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தின் எளிமையான வலிமையான ஒரே சாதனம் அலைபேசி மட்டுமே...

அலைபேசி இணைப்பினை வழங்கும் நிறுவனங்கள் தொடக்க காலத்தினில் மாதாந்திர கட்டணமாக குறைந்த பட்சம் 250 ரூபாயையாவது வசூலித்தன அதனால் அவற்றால் எண்ணிலடங்கா குறுஞ்செய்தி சேவையை இலவசம் என்ற பெயரில் வழங்க முடிந்தது..

பின் வந்த ஆண்டுகளில் இவற்றின் சேவை நிறுவன போட்டியாலும் அதிகபடியான குறுஞ்செய்திகள் பகிரபட்டதால் தொலைதொடர்பு இணைப்பில் பாதகம் ஏற்பட்டதாலும் - பணவரவை கருத்தில் கொண்டும் என பல காரணங்கலால் இந்த இலவச குறுஞ்செய்தி சேவை என்பது குறைந்தபட்சம் 1 பைசா முதல் அதிக பட்சம் 50 பைசா வரை உள்ளுர் தொடர்புக்கும் 1.50 பைசா வரை வேறு மாநில தொடர்புக்குமான குறுந்தகவல் சேவைகளாக மாற்றப்பட்டு விட்டது இதுவே இன்று குறுஞ்செய்தி பரவலாக ஏண்டா வருகிறது ! என்ற காலம் போய் எப்படா வரும்! என காத்திருக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

இதனை போக்கும் வகையில் ஆறுதலான ஒரு விஷயமாக இணைய உபயோகிப்பாளர்களுக்கென இணையம் வழியான குறுந்தகவல் சேவையினை பல்வேறு நிறுவனங்கள் அளிக்கின்றன.  இவை இணைய விளம்பரம் என்பதன் மூலம் பொருளை ஈட்டுதல் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டாலும் இவற்றின் சேவையினை பாராட்டாமல் இருக்க முடியாது.

ஏனெனில் குறுகிய நேரத்தில் ஆயிரம் குறுந்தகவல்களை பகிரும் வன்மை ஒரு சிறந்த இணைய வழி குறுந்தகவல் அமைப்புகள் பெற்றுள்ளன...அவற்றில் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள தேசிய அளவில் இலவச சேவையினை வழங்கி வரும் முக்கிய மூன்று இலவச குறுந்தகவல் அளிப்பவை பற்றிய ஒரு பார்வைதான் இங்கே!Way2sms.com


இந்தியாவில் அதிகபடியான இணையதள வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் இலவச குறுந்தகவல் அளிப்பான் இதுதான்.  ஒரு நாளைக்கு 500 குறுந்தகவல் வரை மட்டுமே அனுப்ப முடியும் என்றாலும் இதன் திட்டமிடப்பட்ட வலைபக்க அமைப்புமுறை மிகவும் சிறப்பான வகையில் செயல்பாட்டினை அளிப்பதால் இது பலரால் பெரிதும் விரும்பப்படுவதாக உள்ளது.


160by2.com
இதுவும் நல்ல ஒரு நிலையை அடைந்துள்ள இணையபக்கமானாலும் இதன் மூலம் அனுப்பபடும் குறுஞ்செய்திகளில் விளம்பரங்கள் பாதி பக்கத்தினை நிரப்பிவிடும். இதிலும் 140 எண்ணுருக்கள் அமைக்கப்பட்டாலும் 2 குறுந்தகவல் அளவில் அவர்களின் விளம்பரமும் சேர்த்து அனுப்பபடுகின்றன.

இதன் மொத்த எண்ணி்க்கை ஒரு நாளுக்கு 1000 குறுந்தகவல்களாகும்.


fullonsms.com
எந்தவிதமான விளம்பரங்களையும் தன் குறுஞ்செய்தியில் பதிக்காமல் முழு குறுஞ்செய்தியையும் உபயோகிப்பாளர் விருப்பமாக்கிவிடுகிறது இது..  ஆனால் இதனை கையாள்வதும் அதிகமாக நண்பர்களை சேர்பதும் முதலில் கடினம்...
இது எண்ணிலடங்கா குறுஞ்செய்தி சேவையை அளிக்கிறது..
Previous
Next Post »