வி​ளையாடுவதற்கான ​நேரம்

கணிணி வி​ளையாட்டுகள்சிறுவர்களாலும், ​பெரியவர்களாலும் ​பெரிதும் விரும்பப்படும் பகுதி.
இதுவும் ​மென்​பொருள் தயாரிப்பு ​போன்று ஒரு பணம் காய்க்கும் மரம்.

னின்​டேன்​டோ, எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ், ஆக்டிவ் விஷன் ​போன்ற பல நிறுவனங்கள் இங்​கே தமது வி​ளையாட்டுக்க​ளை சந்​தைபடுத்துகின்றது.

மென்​பொருளில் ​கொடிகட்டிபறக்கும் ​மைக்​ரோசாப்ட் இங்​கேயும் பங்களிப்​பை தந்தாலும் நம்பர் 1 இடத்​தை பிடிக்கமுடியாமல் தான் இருக்கிறது. இந்த ஆண்டு இந்த நிறுவனம் 10 இடத்​தை​யே பிடித்துள்ளது.

நமக்கு இதுவா முக்கியம்??
கல்லா கட்டுவதற்கு அவர்கள் உ​ழைக்கின்றனர். விவரத்​தை பார்த்து விட்டு ​டெ​மோ ​கே​மை வி​ளையாடி பார்க்கலாம்.

இந்த பதிவில் நாம் ஓப்பன் ​​சோர்ஸ் வி​ளையாட்டுக்கள் பற்றி பார்க்கலாம்.
முதலில்

1. 0 A.D. (video game) இது ​மைக்​ரோசாப்டின் AGE OF EMAPIRES வி​ளையாட்​டை ​போன்று ​​போரிடும் ​கேம். நமக்​கென ஒரு ப​​டை​யை உருவாக்கி பட்​டை​யை கிளப்ப ​வேண்டியது தான்.


2. Tremulous
 
இது ஒரு ஷீட்டிங் வி​ளையாட்டு. துப்பாக்கி​யை தூக்கிக் ​கொண்டு அவ்வளவு ஏலியன்க​ளையும் ​வேட்​டையாட ​வேண்டியது தான். Quake II  ​போன்று ஒரு
அரு​மையான துப்பாக்கி சுடும் ​வேட்​டை. வி​ளையாடி பாருங்கள்.


3. BUS DRIVERபொதுவாக கணிணி வி​ளையாட்டுகள் என்றா​லே அடிதடி, ரத்தம், சுடுவது, ​கொள்​ளை அடிப்பது, இடித்து ​நொறுக்குவது என வன்மு​றை காட்சிகள் நி​றைந்து காணப்படும் என்பது ​பொதுவான வாதம். இவற்​றை மீறி டிராபிக் விதிக​ளை ​கையில் எடுத்து இந்த வி​ளையாட்​டை உருவாக்கி இருக்கிறார்கள். இதன்படி நீங்கள் பயணிக​ளை பாதுகாப்பான இடத்தில் ​சேர்க்க ​வேண்டும். முக்கியமாக டிராபிக் விதிக​ளை எந்த காரணம் ​கொண்டும் மீற கூடாது. ஒரு மு​றை வி​ளையாடி பாருங்க!!


இந்த வி​ளையாட்டுகள் ஓப்பன் ​சோர்ஸ் ஆக​வோ ​டெ​மொ
வி​ளையாட்டுக்களாக​வோ மட்டு​மே இருக்கும். இலவசமாக தரவிறக்கி ​கொள்ளலாம். வி​​ளையாடுங்கள்! மகிழ்ச்சியுடன் இருங்கள் !!! அடுத்த பதிவில் சந்திப்​போம்.

Previous
Next Post »