ஆன்லைனில் - பாதுகாப்பான பணபரிவர்த்தனை செய்யும் முறைகள்….




உலகமயமாகிவிட்ட வர்த்தக முறை…

இருந்த இடத்திலிருந்தே அனைத்தும் முடிந்து விடுகிறது - இணையம் வழியாக. அப்படி இருக்க“ பணபரிவர்த்தனைக்கு என்ன விதி விலக்கா?

என்னதான் வங்கிகள் தங்களது சேவையை திறம்பட அளித்தாலும் நவீன அறிவாளர்கள் நாடுவது ஆன்லைன் பணபரிவர்த்தனையை தான்.

இந்தியாவில் முதன்மை வங்கியான SBI தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் ஆன்லைன் பாங்கிங் அக்கவுண்டை திறந்து தருகின்றது. இதனால் நாம் நமது நடப்பு கணக்கு வழக்கு தகவல்களை இணையம் மூலமே காணவும் பணபரிவர்த்தனைகளில் ஈடுபடவும் செய்யலாம்.



          இது மட்டும் அல்லாமல் அநேக மக்களால் அநாவசியமாக உபயோகிக்கப்படும் செல்போன் முதற்கொண்டு பெரிய பெரிய கம்பனிகள் வரை ஆன்லைனில் பணபரிவர்த்தனையினை செய்து விட முடியும்.

          இதற்கெல்லாம் நமக்கு தேவையானது ஒரு நல்ல வங்கியில் அக்கவுண்டும் ஏ.டி.எம் அல்லது கிரடிட் அல்லது டெபிட் கார்டுகள் தான்.

      குறிப்பிட்ட அந்த இணைய பகுதிக்கு நாம் சென்று நமது உள்நுழையும் செயல்முறையினை செய்து பின் அதன் வழியாக நாம் பணபரிவர்த்தனைகளை செய்துக் கொள்ள முடியும் ஆனால் சிக்கல் இங்கு டோர்ஜான் வைரஸ் வாயிலாக காத்துக்கிடக்கிறது.

     இந்த வைரஸ்கள் நமது கணினியின் செயல்பாடுகளில் அதாவது ஆன்லைன் பரிமாற்றங்களில் தனது ஊடுருவலை நிகழ்த்தி தனது பரிவர்த்தனைகளை நமக்கே தெரியாமல் செய்துக்கொள்கின்றன.

                   இதற்காகதான் பல ஆன்லைன் பரிவர்த்தகர்கள் தங்கள் வலைபக்கத்தினை safty பாதுகாப்பானது என்பதை உறுதி செய்துக்கொண்டு அந்த அக்மார்க் முத்திரை யினை நமது இணைய பக்கத்தின் http://www...... என்பதன் இடது கோடியில் பச்சை நிறத்திலான ஒரு குறியீட்டினால் காட்டும் இதுதான் நமது ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்கு சிறப்பான மற்றும் பாதுகாப்பானதுமான ஒரு நிலை.


  1. மேலும் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் மேலும் சில பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும் அவை…
  2. நாம் பரிமாற்றம் செய்யும் தளம் தரமானதுதானா அதாவது பாதுகாப்பானதுதானா என்பதை முன்கூட்டியே அறிந்துக்கொள்ள வேண்டும்.
  3. பரிமாற்றத்தின் போது அதற்கான தகவல்களை பத்திரமாக தனக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
  4. 3டி ஐடி யை இணைய பக்கம் தயாரித்து தரும் அதனை குறித்துக்கொண்டு அதனை கையாள வேண்டும்.
  5. இணைய வழியான பல பண பரிமாற்றங்கள் பேபால் paypal என்ற இணைய பக்கம் மூலமே நடைபெறுகின்றன. அதனை பற்றிய தகவலினை அறிவொளி அவர்கள் வழங்குவார்
Previous
Next Post »

3 comments

Write comments
September 9, 2011 at 9:07 AM delete

Ippadiye Pottu kodunga jagan!!!
pay pal patri yanakku ontrum theriyathu. irunthalum muyarchikkiren.

Reply
avatar
September 9, 2011 at 9:53 AM delete

///**இணைய பக்கத்தின் http://www...... என்பதன் இடது கோடியில் பச்சை நிறத்திலான ஒரு குறியீட்டினால் காட்டும் இதுதான் நமது ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்கு சிறப்பான மற்றும் பாதுகாப்பானதுமான ஒரு நிலை.**///

பச்​சைநிறத்தில் காட்டும் வ​லைபகுதிகள் அ​​னைத்​தையும் நம்பி கடவுச்​சொல்​லை ​கொடுக்க முடியாது.
http:// என்று வரும் அ​​னைத்தும் பாதுகாப்பற்ற​வை. எளிதாக ஹாக் ​செய்யபடகூடிய​வை.

https:// என்று வருப​வை தான் பாதுகாப்பு. s என்பது இங்​கே secure குறிக்கும்.

Reply
avatar
September 9, 2011 at 11:59 AM delete

உங்களின் பின் ஊட்டத்திற்கு நன்றிகள் அறிவொளி….

Reply
avatar