பூமியை நோக்கி வரும் செயற்கைகோளால் இந்தியாவிற்கு ஆபத்தா?  1991 ல் நாசாவால் ஏவப்பட்டது UASR (upper atmospheric research satellite)  இதற்கு என்ன இப்போது என்கிறீர்களா?

  அது பழுதடைந்து சுமார் 6 ஆண்டுகள் ஆகின்றன... அதாவது 2005 இல் இது பழுதடைந்துள்ளது... இப்போது தான் அது பூமியை அடைய அதாவது பூமியின் மீது மோதுவதற்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது அல்லது அதுவாகவே குறித்துக்கொண்டது ( அறிவியலில் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கெண்டுதானே ஆகவேண்டும் )

  இன்று செப்டம்பர் 22 தான் அதற்கான நாள் என்று நாசமாக போன நாசா (சும்மா ரைம்மிங் காக சீரியஸ் ஆகாதீங்க)  அறிவித்துள்ளது.

  இது இந்தியாவை தாக்குமா அதாவது இந்தியாவின் மீது மோதுமா என்று கொஞ்சம் உற்று நோக்கும் போது (இணைய உலாவலில்) அதற்கான சாத்திய கூறுகள் எதுவும் தென்படவில்லை.


  6 டன் எடை கொண்ட அது மொத்தமாக 26 துண்டுகளாக பூமியை அடைய போகிறது.. எவ்வளவு பெரிய எரிக்கல்லையும் சும்மா தூசியாக துப்பிவிடும் நம் வலிமண்டலம் இதனை ஒரு கை பார்த்து விடாதா என்றால் அதிலும் கொஞ்சம் சிக்கல்கள்.. அதில் வெப்ப தடுப்பு அடுக்குகள் இருப்பதால்தான்.

  என்னமோ ஏதோ அது எங்கு விழுந்தது எவர் தலையில் விழுந்தது என்பதை அறிய நாம் நாளை ஒரு நாள் காத்திருக்க வேண்டும். 
Previous
Next Post »