கூகுள் பிளஸில் இணைவது எப்படி?   கூகுளின் பல இணைய பயன்பாடுகளில் தற்போதய பயன்பாடாக இணைந்துள்ளது கூகுள் பிளஸ்தான்.

   முகப்புத்தகத்தினை முண்டியடித்துக்கொண்டு தனது வலிமையினை காட்ட படையெடுத்துள்ளது இந்த படைப்பு.

  எளிமையான வடிவமைப்புடன் பலரை பலவாராக வட்டத்திற்குள் விட்டுவிட்டு நண்பர்களை பிடிக்கும் இந்த செயல்முறையும்.

   நம் கணினியில் உள்ள படங்களையும் பைல்களையும் அப்படி இழுத்து இப்படி விட்டால் போதும் பைல்களை எல்லாம் செலக்ட் செய்து கொண்டிருக்கும் அவசியமில்லாத எளிய செயல்முறைகளாலும் இந்த கூகுள் பிளஸ் ஆனது பிரபலமடைந்து வருகிறது.

   முகப்புத்தகத்தின் அனைத்து நபர்களையும் தன்பக்கம் சாயவைக்க இதுபடும் பாடு அட அட அட...

   ஆர்குட்டின் தோல்வி அடியின் பலம் அறிந்ததாலோ என்னவோ! முகப்புத்தகத்தின் வடிவமைப்பிலேயே காப்பியடித்து இது செய்து கொண்டிருக்கிறது வசீகரம்.


  முகப்புத்தகத்தின் விரும்பு என்ற பொத்தானை +1 என்றும்  உங்கள் மனதில் உள்ளதை பதியுங்கள் என்று உள்ளதை இது புதுசு என்றும் சொற்களை மாற்றி வைத்துக்கொண்டு ஒரு வழியாக பிரபலமடைந்து வருகிறது இந்த சமூக வளைதளம்.

   இதனுடன் இணைவது என்பது தற்போது சோதனை அடிப்படையிலான முயற்சியாகவே இருந்து வருகிறது.  சில உங்களின் நண்பர்கள் கூகுள் பிளசில் இருந்து அவர்கள் உங்களை பரிந்துரைத்தால்தான் அதனுள் நீங்கள் இணைய முடியும் என்றதொரு தன்மையுடன் தற்போது இயங்கி வருகிறது கூகுள் பிளஸ்.

   உங்களிடம் முகப்புத்தக அக்கவுண்ட் இருந்தால் அதிலிருந்து http://www.facebook.com/#!/get.plus என்ற லிங்கிற்கு சென்று அந்த புரோபைலினை (விரும்பு) பொத்தானை அழுத்தவும் அதோடு உங்களின் கூகுள் பிளஸை விரும்பும் எண்ணத்தினையும் அவர்களுடன் share செய்யவும் அவ்வளவுதான் உங்களுக்கு உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு செயல்பாடு தொடங்கிவிடும் உங்களின் சமூக வலைதள வட்டாரத்தினையும் உயர்த்தி கொள்ளலாம்.

   கூகுள் பிளஸ் பற்றிய செயல்முறைகளை பற்றி அறிய இந்த யுடியுப் பக்கத்தினை பார்க்கவும்.    

  http://www.youtube.com/playlist?annotation_id=annotation_216004&src_vid=mnGGQiP-2TU&list=PL7A12B52EE5427113&feature=iv 


என்னதான் போட்டா போட்டி இருந்தாலும் old is gold... 
Previous
Next Post »

1 comments:

Write comments
September 21, 2011 at 11:47 PM delete

கூகி​லை பார்த்து தான் ​பேஸ்புக் சர்க்கிள் வசதி​யை காப்பி அடித்துள்ளது ​​​ஜேக்!!!!

Reply
avatar