த​லை​மை மாறிவிட்டது - ஆப்பிள்


நீங்கள் இந்த பதிவி​னை படிக்கும் ​போது இது ப​ழை​ய ​செய்தி ஆகி இருக்கலாம்.
சாப்ட்​வேர் உலகின் 20 ஆண்டு கால  முடிசூடா மன்னர் பில்​கேட்ஸ் ஓய்​வை அடுத்து ​டெக் து​றை மற்​றொரு ​பெரிய "த​லை​"க்கும் விடுமு​றை ​கொடுக்கிறது. 


அது ஆப்பிள் நிறுவனத்தின் த​லை​மைச் ​செயல் அதிகாரி ஸ்டீவ்ஜாப்ஸ்.பொதுவாக இது ​போன்ற அறிவிப்புகள் பங்கு சந்​தை​யை பாதிக்கும் என்பதால் அறிவிப்புகள் மா​லை ​நேரங்களில் மட்டு​மே ​வெளியிடப்படும்.
ஸ்டீவ் ரிடயர்ட் ஆன ​செய்திக்கு அவ்வளவாக பங்கு சந்​தையில் ​பெரிய மாற்றமில்​லை. இது பங்கு தாரர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் மீ து ​வைத்து இருக்கும் நம்பிக்​கை​யை காட்டுகிறது.

இதுவ​ரை என்ன ​செய்தார் ஜாப்ஸ் ???


1970 களில் ஆப்பிள் நிறுவனம் ​தொடங்கிய சில நபர்களில் ஸ்டீவ் ம் ஒருவர்.
சிறிய நிறுவனம் சிறப்பான ஒரு இடத்​தை பிடிக்க எவ்வளவு முயற்சிக்க​வேண்டும் என்பது உங்களுக்கு ​தெரிந்த விசயம் தான். கிட்டதட்ட 20 ஆண்டுகள் ஆப்பிளின் முன்​​னேற்றத்திற்கு அர்பணித்து கூட​வே இருந்து உயர்த்திய ஆப்பிளின் பிதாமகன் உடல் நி​லை ​கோளாறு காரணமாக ஓய்வு ​பெறுகிறார்.

ஐ​மேக்கின் ஈர்க்கின்ற வடிவ​மைப்பு இவரு​டைய த​லை​மையின் கீழ் ​பெறப்பட்டதாகும்.

2007 ல் பல்​வேறு அம்சங்க​ளை உள்ளடக்கிய ஐபாடுக​ளை ​வெளியிட்டது.

ஐ​போன் 4 ​வெளியிட்டது,

இவரு​டைய திட்டங்களில் சிறப்பானது ஐ​போ​னை மறுசுழற்சி ​செய்வதாகும்.பெரிய ​போட்டி நிறுவனங்களான ஆப்பிள், ​மைக்​ரோசாப்ட் ஆகியவற்றின்
த​​லைவர்கள் அந்த நிறுவனங்களில் த​லை​​மை​பொறுப்பில் இல்லாதது அந்த ​"டெக்" உலகின் ​பெரிய இழப்பு ஆகும்.


அவருக்கு அடுத்தபடியாக இந்த ​பெரிய  ​பொறுப்பி​னை த​லையில் சுமக்க இருப்பவர் "டாம் குக்". 


இவர் ஒரு 50 வயதான இ​​​ளைஞர்.  கணிணி யுகம் முடித்து ​மொ​பைல்
டி​வைஸ்களின் யுகம் ​தொடங்கும் ​​போது இந்த மாற்றம் சரியானதுதான். ​மொத்தத்தில் பார்க்கலாம் இவர் த​லை​மையில் ஆப்பிள் என்ன சாதிக்கிறது என??
Previous
Next Post »