அதிகபடியான விளம்பர இமெயில்களால் திணறு பவரா நீங்கள்? தீர்வு இதோ!

              

             


   மின்னஞ்சல் என்பது மின்னணுத் தொடர்புச் சாதனங்கள் மூலம் செய்திகளை
எழுதுதல், அனுப்புதல், மற்றும் பெறுதல் போன்றவற்றைச் செய்யும் முறையாகும்.

             சாதாரணமாக அஞ்சல்கள் அனுப்பும் போது யாரிடமிருந்து யாரிற்கு அனுப்புவதைப் போன்று இங்கு உங்கள் மின்னஞ்சலும் பெறுபவரின் மின்னஞ்சல் முகவரியும் தேவைப் படுகின்றது.

                            ஆரம்பத்தில் ASCII முறையில் அமைந்திருந்த மின்னஞ்சல்கள் பின்னர் காலப்போக்கில் உலகின் பெரும்பாலான மொழிகளை ஆதரிக்கும் யுனிக்கோட் முறையை ஆதரிக்கின்றது.

                 மின்னஞ்சல் இரு பாகங்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்று மின்னஞ்சல் தலைப்பு மற்றயது மின்னஞ்சல் உள்ளடக்கம். மின்னஞ்சல் தலைப்பில் கட்டுப்பாட்டுத் தகவல்கள் உள்ளடங்கியுள்ளன.


நம்மில் எல்லோரும் மின்னஞ்சல் அனுப்புவதையும் பெறுவதையும் அறிந்தவர்கள். அதன் பல்வேறுவகையான மின்னஞ்சல் நிறுவனங்களும் நமக்கு தெரியும் அவை.

 gmail
Yahoo
hotmail
sify
rediff

என நீள்கின்றன.

  நம்மில் பலர் gmail என்பதையே பிரத்தியேகமாக உபயோகிப்போம் காரணம் அதனால் இணைய உலகில் பல வகையான நன்மைகளை பெறுதல் என்பதால்.   ஒரு கூகுள் மெயில் பயனரை வைத்துக்கொண்டு நாம் உலகின் அதிநவீன இணைய உலகை ஒரு கை பார்த்துவிடலாம் என்பதுதான் உண்மை அதில் ஒன்றுதான் வலைப்பூக்களும்.

   சரி நாம் அதனை பற்றி பிறகு பார்க்கலாம்... இப்போது நமது மெயிலுக்கு வரும் அனைத்து செய்திகளும் ஒரு தனிநபரின் சொந்த விருப்பத்தில் அதாவது man power என்று சொல்வார்களே. கணினியால் எந்த ஒருவரின் துணைக்கொண்டும் ஆயிரக்கணக்கான மெயில்களை ஒரு அக்கவுண்டுக்கு அனுப்பிவிட முடியும். ஆனால் அதனால் விளையும் கேடுகள் என்ன?


  1. நம் மெயில் திறப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.
  2. சில spam மெயில்கள் ஒரு நாளைக்குள் ஆயிரக்கணக்கான மெயில்களை கூட நமக்கு அனுப்பி நம்மை திண்டாட செய்து விடும்.
    3. தேவையற்ற பலரால் தாறுமாறாக மெயில்கள் வந்து கொட்டும்.


   இவை அனைத்திற்கும் சிறந்த தீர்வாக இதோ வந்துவிட்டது Boxbe என்னும் மெயில்களை தனி நபர் தனது விருப்பப்படி தனது சொந்த முயற்சியால் தான் அனுப்புகிறார் என்பதனை செக் செய்யும் செக் போஸ்ட்.

    ஆம் Boxbe ஒரு நல்ல செக் போஸ்ட் தான்.

     இது தேவையற்ற இமெயில்களை வகைப்படுத்தி வைக்கவும்
உங்களால் விரும்பப்படும் நபரால்தான் இமெயில் அனுப்பப்பட்டுள்ளது என்பதை நம்பலாம்.
இது கூகுள் மெயில் யாகூ ஏஓஎல் ஆகிய மெயில் களுடன் ஒத்து போகிறது.


    என்ன உங்க இன்பாக்ஸ் நிறைந்து வழிகிறதா தேவையற்ற மெயில்களால்! இன்றே உபயோகித்துப்பாருங்கள் தேவையற்ற விளம்பரங்களையும் ஸ்பேம் களையும் களைந்து ஒரு சுத்தமான வீட்டைப்போல உங்கள் மெயிலை வைத்துக்கொள்ளுங்கள்.


Click to Ener Boxbe.com.


என்னுடைய முகப்புத்தகம்    http://www.facebook.com/jackn.nath

   
    
Previous
Next Post »

1 comments:

Write comments
stalin
AUTHOR
September 15, 2011 at 5:26 AM delete

பகிர்வுக்கு நன்றி

பயனுள்ள தகவலை தந்துள்ளீர்கள்

Reply
avatar