கல்வியின் பெயரால் பகல் கொள்ளையர்கள்!
  ”கல்வி” ஒருவனை தற்சார்பு உடையவனாகவும் சுயநலம் இல்லாதவனாகவும் மாற்ற வேண்டும் . என வேதங்களில் பழமையான ரிக் வேதம் கூறுகிறது.

   ஒருவனிடம் உள்ள சிறந்த பண்புநலன்களை வெளிக்கொணர்வதே கல்வி என்று பல கல்வியலாளர்கள் பலவிதமாக கூறுகின்றனர்....

   இவர்கள் கூறுவது இருக்கட்டும், கல்வி நிறுவனங்களை நடத்தும் கல்வி அதிபர்கள் கூறுவது என்ன தெரியுமா ?  கல்வி என்பது கட்டணம் கட்டினால் மட்டுமே கிடைப்பதென்று!

   அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி என்று நாம் நமது நாட்டில் சட்டங்கள் போட்டிருக்கலாம். ஆனால், நடப்பது என்ன? ஒரு பால்வாடி கூட சேர்க்க வயது தேராத ஒரு குழந்தையை கூட பிரி கே.ஐி என்றுச் சொல்லி வருடத்திற்கு 30,000  முதல் செலவுசெய்ய தயாராகிவிட்டனர் கூலிக்கு வேளை செய்யும் குடும்பத்தினரும்.   காரணம் தனது குழந்தை தனியார் பள்ளியில் அதிக கட்டணத்தில் படித்தால்தான் தனக்கு கவுரவம் என்று...

    இன்று தனியார் பள்ளி கூடத்தினில் கல்வி கற்ற எத்தனை பேர் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?

இல்லை... இல்லவே இல்லை...

    ஒரு அரசாங்க பள்ளியில் தனது தாய்மொழியில் (மும்மொழிப் பாடத்திட்டம் என்பது கூடாது என்பதற்காக நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் இல்லாமல் ஆக்கிவிட்டோம் அது வேறு). பயின்று விட்டு தனது சிந்தனை ஓட்டங்களால் சாதிப்பவர்களே அதிகம் ...

    இப்படிப்பட்ட பெற்றோர்களால் கல்வியின் பெயரால் கொள்ளையடிக்கும் பகல் கொள்ளையர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    இதில் மிகவும் அதிக எண்ணிக்கையில் கல்வி நிறுவனங்களை அமைத்து கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் கொள்ளையடித்து வருபவர்கள் அரசியல்  வாதிகளும், மதவாதிகளும் தான்.

     இதிலும் நல்ல முறையில் கல்வியை ஒரு சமூக பணியாக நினைத்து - ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி - சிறந்த கட்டமைப்பு வசதிகளுடன் கல்வி அளிப்பவர்களும் உண்டு. ஆனால், பல தனியார் கல்வி நிறுவனங்கள் அவ்வாறு எண்ணத்துடன் செயல்படுவதில்லை.

    பலமடங்கு கல்வி கட்டண வசூல் மூலம் கல்வியை சரஸ்வதி கையிலிருந்து பிடுங்கி லட்சுமி கையில் பகிரங்கமாக வைக்க முயல்பவர்கள்தான் அதிகம்.

          இதற்கு காரணம் பாமரனும் பணக்காரனும் கல்வி என்பது கட்டணம் அளித்தால் மட்டுமே நல்ல முறையில் பெற முடியும் என்று எண்ணுவதால்.

          ஒரு சாதாரண குடிமகன் தனது மகனை ஒரு தனியார் கல்வி நிறுவனத்தினில் சேர்க்கிறான் என்று வைத்துக்கொள்வோம்!  அவன் வரிபணம் ஒருபக்கம் வீணாக்குகிறான், அதே சமயத்தில் அதற்கு இணையான கட்டணத்தினை கல்வி நிறுவனத்தில் கட்டுகிறான், அதாவது! இருமடங்கான பணத்தினை விரயமாக்கிவிட்டு அவன் அடைவது என்ன? தனது குழந்தையின் எதிர்காலத்தினை தனியாரிடம் தாரை வார்ப்பதுதான்...

தனியாரிடம் தனது குழந்தையின் எதிர்காலத்தினை தாரை வார்ப்பது என்றால் அது வெறும் இன்றைய நிகழ்காலத்தினை மட்டுமல்ல அவனின் வேளையினையும் இவ்வகையிலான தாரைவார்ப்புகள் தானாக நிகழ்த்திக் கொள்கின்றன....

எப்படியென்றால் ஒரு தனியார் நிறுவனம் கல்வியை மட்டும் அளிப்பதில்லை அதனுள் பல படிநிலைகளிலான வேளையாட்களையும் கொண்டிருக்கிறது.

ஒரு மருத்துவ பல்களைக் கழகத்தினை எடுத்துக்கெள்ளுங்கள் அரசாங்கமுடையதானால் அதில் ஒரு ஏழைமாணவன் படிப்பான் ஏழைக்கு வைத்தியம் கிடைக்கும் அதே மருத்துவமனையில் அவன் வேளைக்கு சேர்ந்து அரசாங்க ஊழியனாவான்...

   ஆனால் பல தனியார் மருத்துவக்கல்லூரிகள் என்ன செய்கின்றன?  பல லட்சங்களை பிடுங்கிக்கொண்டு கல்வி கற்பிக்கின்றன. பல ஆயிரங்களை பிடுங்கி்ககொண்டு மருத்துவம் பார்க்கின்றன அதே வேளையில் தன்னிடம் படிக்கும் மாணவர்களை குறைந்தது 5 வருடமாவது தன்னிடமே குறைந்த ஊதியத்தினில் வேலைக்கு வைத்துக்கொள்கின்றன... இதே நிலைதான் கல்வி நிலையங்களிலும்... இன்று தனியார் பள்ளியில் படிக்க வைக்கும் பெற்றோர்கள் நாளை உங்களின் பிள்ளைகள் ஒரு ஆசிரியாகும் விருப்பம் கொண்டால் அவனும் ஒரு தனியார் வேளைக்குதான் செல்ல வே்ண்டியிருக்கும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும!....

சிந்தனை ஓட்டங்கள் தொடரும்.... அடுத்த படைப்பில்...  
Previous
Next Post »