விக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி?

விக்கிபீடியா பற்றி பார்க்கலாம்.


விக்கிபீடியா பற்றி அநேகருக்கு தெரிந்திருக்கும் .  கூகுள் போன்ற தேடு பொறிகளில் எதையாவது தேடு எனக் கொடுத்தால் நமக்கு முன்னமே காட்டுவது விக்கிபீடியா பகுதியாகத்தான் இருக்கும் அந்த அளவு அதிகமான ஒரு தொகையினை தனது பக்கம் ஈர்த்து வைத்துள்ளது விக்கிபீடியா...

       விக்கிபீடியாவில் என்ன சாத்தியம்?
    
      இணைய தொடர்புடைய ஒருவரால் (அதாவது அவர் எப்படிப்பட்ட சாதாரண மனிதனாக இருக்கட்டும்) அவரால் கூட ஒரு பக்கத்தில் உள்ள விஷயங்களை மாற்றி எழுதி விடவோ அல்லது இருக்கும் தகவலினை அழித்து வேறொரு விஷயமாகவோ எழுதிவிடும்  வன்மையினை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது விக்கிபீடியா.இதிலும் ஒரு மாதத்திற்கு 3000 பதிவுகளை திருத்தும் திறமை சாலிகளுக்கு விக்கிபீடியா தனது நிர்வாகி அந்தஸ்தினை வழங்கி விடுகிறது. நிர்வாக அந்தஸ்தினை பெற்ற ஒருவரால் மட்டுமே படங்களை விக்கிபீடியா பகுதியில் சேர்க்கவும் ஒரு புதிய தலைப்பிலான விக்கிபீடியா பகுதியை இணையத்தில் இணைக்கவும் முடியும்.       சரி இணையத்தில் யார்வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் உங்கள் Blog யை மாற்றி அமைக்கலாம் என்று இருந்தால் என்னவாகும் ..

        "கண்ணா முன்னா" என்று ஏதாவது யாராலும் கிறுக்கப்படும் இல்லையா இதுதான் நடக்கிறது விக்கிபீடியா இணைய பகுதியிலும் ஆனால் சிறந்த நிர்வாகிகள் அந்த தகவலை அவ்வப்போது கவனித்து அழித்து ஒரு சிறந்த பகுதியாக அதனை நிர்வகிக்கின்றனர்.இதனால் தான் விக்கிபீடியா ஒரு நல்ல தகவல் களஞ்சியமாக  மிளிர்கிறது.


விக்கிலீக் பற்றி பார்க்கலாம் .

விக்கிலீக் ​ஒரு சிறிய குழு​வை ​வைத்துக் ​கொண்டு உல​கை ஆட்டிப்ப​டைக்கிறது. இதன் படி விக்கிலீக்கிற்கு தகவல் அளிப்பவர்கள் அந்த குழுவின் முன்ன​ர் தகவல்க​ளை அளிக்க​வேண்டும். அதன் உண்​​மை தன்மை​யை ஆராய்ந்து விக்கிலீக் ​​வெளியிடும்.

அவர் ​செருப்பு வாங்க விமானம் ​வைத்துள்ள தகவல் கூட அரசியல் வாதிகள் ​செய்யும் அட்டுழியக்​ளை கண்டு ​பொறுக்காத ஒரு உண்​மை உணர்வாளன் தான் விக்கிலீக் கிற்கு தகவல் அளித்து இருக்க ​​வேண்டும்.

அ​தெப்படி ​டெக்னாலஜி இவ்வளவு முன்​னேறி இருக்கும் ​போது தகவல் அளித்தவ​ரை டிராக் ​செய்யமுடியாதா ?? என்ற ​கேள்வி எழும்.

அதற்கு தான் விக்கிலீக் ​தகவல் அளிப்பவர்களுக்கு ​டோர் பரிந்து​​ரை ​செய்கிறது. ​டோர் ன் இலச்சி​னை​யே ​​வெங்காயம் தான்.

எப்படி ​வெங்காயம் உரிக்க உரிக்க  ஒன்றும் இல்லாமல் ​போகின்ற​தோ அது ​போலதான் தகவல் அளிப்பவ​ரை கண்டிறியும் ​வே​லையும். ​டிராக் ​செய்ய முயல்பவருக்கு மூச்சு தான் முட்டி ​போகும்.


       மேலும் பல இணையவழியான தகவல் பரிமாற்றங்களை லாவகமாக சுருட்டி வைத்துக்கொள்ளும் பணியையும் விக்கிலீக்ஸ் செய்கிறது.ஹாக்கிங் நுட்பத்தின் மூலம் ​வல்லரசு நாட்டின் இரகசியங்க​ளை​யே ஒட்டு ​கேட்டுவிட்டனர்.

     இது கூறும் ஒரே வார்த்தை நாங்கள் மக்களுக்கு தகவலை சென்றடைய செய்கிறோம் என்பது மட்டுமே... இதனால் ஒரு நாட்டின் எந்த வகையான உள்குத்து, வெளிக்குத்துக்கு  அஞ்சும் வேளைகளையும் இது பார்ப்பதே இல்லை.


    என்ன?  விக்கிலீக்ஸ் _ ஆல் ஒன்றும் தீமைகள் விளைவது இல்லை என்பதுதான் மனம் மகிழவேண்டிய செய்தி... அதிகார வர்கத்தினரின் கொட்டத்தினை கொஞ்சம் அடக்கிப்பார்க்கும் அறிவியல் தொழில்நுட்பத்தின் அதிசயமாகவே சாதாரண மக்களுக்கு விக்கிலீக்ஸ் கண்ணில்படுகிறது...

விமானம் ​வைத்து இருப்பவர் எப்படிப்பட்டவர்! என்பது அனைவரும் அறிந்ததே!  அதனுள் தமிழில் அழகாக கூறுவார்களே! ”தற்குறிப்பு ஏற்ற அணி” என்று அந்த பணியைதான் விக்கிலீக்ஸ் சமீபத்தில் செய்துள்ளது.

    அமெரிக்க சர்வாதிகார முகத்திரையை ஈராக் போரின் கொடுரங்களை நவம்பர் 2010 ல் வெளியிட்டது முதல் பிரபலமாகிவிட்ட இந்த அமைப்பு முறை தேவைதான் சாதாரண மக்களுக்கு...

      
            இறையாண்மை என்று கூறிக்கொண்டு நாம் இலங்கைத் தமிழர்களை கண்ணெதிரிலேயே இழந்தோமே  அந்த செயல்கள் நடைபெறாமல் காத்து மக்களுக்கு ஒரு இணையக் கடவுலாக காட்சியளிக்கிறது விக்கிலீக்ஸ்...

வாய்மை வாழ்கிறது - விக்கிலீக்ஸ் வழியாக...

எங்கெல்லாம் அதர்மம் தலையெடுக்கிறதோ அங்கெல்லாம் விக்கிலீக்ஸ் நானும் பார்க்கிறேன் மக்களையும் பார்க்க வைக்கிறேன் என்று கூறி சிலிர்ப்புட்டுகிறது... இல்லையா? நண்பர்களே...
(அக ​​மொத்தத்தில் விக்கிபீடியாவிற்கும், விக்கிலீக் கிற்கும்  -விக்கி- என்ற ​பெயர் ​பொருத்தம் தவிர ​வேறு ​தொடர்பு கி​டையாது என தீர்ப்பு அளிக்கப்படுகிறது)
Previous
Next Post »

5 comments

Write comments
September 7, 2011 at 6:59 AM delete

எங்கெல்லாம் அதர்மம் தலையெடுக்கிறதோ அங்கெல்லாம் விக்கிலீக்ஸ் நானும் பார்க்கிறேன் மக்களையும் பார்க்க வைக்கிறேன் என்று கூறி சிளிர்ப்புட்டுகிறது... இல்லையா நண்பர்களே....//
உண்மைதான் ...

Reply
avatar
September 7, 2011 at 7:46 AM delete

நன்றி வேடந்தாங்கல் கருன் அவர்களே...

Reply
avatar
September 7, 2011 at 10:29 PM delete

அரசியல் வாதிகள் ​செய்யும் அட்டுழியக்​ளை கண்டு ​பொறுக்காத ஒரு உண்​மை உணர்வாளன் தான் விக்கிலீக் கிற்கு தகவல் அளித்து இருக்க ​​வேண்டும்.
super kee it up

Reply
avatar
Anonymous
AUTHOR
September 8, 2011 at 9:30 PM delete This comment has been removed by a blog administrator.
avatar