அன்ராய்டு - இந்த இயங்குதளம் தேறுமா??

   கூகிள் 2005 ஆம் ஆண்டு அன்ராய்டு என்னும் இயங்குதளத்தை வெளியிடப்போவதாக செய்திகள் வந்தன. நான் கூட இத்துடன் தொலைந்து போய்விட்டது மைக்ரோசாப்ட் என எண்ணினேன். இறுதியாக 2008 ல் லினெக்ஸ் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட அன்ராய்டு பதிப்பை செல்பேசிக்காக வெளியிட்டது. மேசைக்கணிணி, மடிக்கணிணி களுக்கு அடுத்து இளைஞர்களால் பெரிதும் விரும்ப்படும் செல்பேசிகள், டேப்லெட்டுகள் ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டு உருவாக்கப்பட்டது. ஐபோன், பிளாக்பெர்ரிக்கு தான் ஆப்பை வைத்து உள்ளனர். மைக்ரோசாப்டுக்கு அல்ல.

முதல் பதிப்பு அவ்வளவு மோசம் இல்லை. ஆனால் பெரிய வெற்றி பெறவில்லை. என்றைக்கு கூகில் தோற்றுள்ளது. 
ஏப்ரல் 2009 1.5 பதிப்பை வெளியிட்டது. இதில் பல்வேறு சிறப்புகள் காணப்பட்டது. புளுடுத் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டது.

ஓரளவு வெற்றியை இந்த பதிப்பு பெற்றது. இதற்கு பின்னர் ஓடாபோன், சோனி எரிக்சன் முதலிய 18 நிறுவனங்கள் அன்ராய்டுடன் இணைவதாக அறிவித்தன.


கடைசியாக 3.0.1 பதிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.  • டேப்லெட்கான மேம்படுத்தப்பட்ட பதிப்பு
  • சிஸ்டம் பார்,
  • மல்டி டாஸ்கிங்,
  • மேம்படுத்தப்பட்ட கீபோர்டு,
  • புதிய பொலிவுடன் காப்பி பேஸ்ட் வசதி, கேமரா,
  • மேம்படுத்தப்பட்ட கேலரி,
  • ஜிமெயில்,
  • விடியோ சேட்,
  • ஹார்டுவேர் ஆக்சிலரேட்டன்,
  • மல்டி கோர் பிராசஸ் போன்ற பல்வேறு வசதிகளுடன் கிடைக்கிறது.

மொத்தமாக 78 மொபைல் போன்களில் அன்ராய்டு இயங்குதளம் காணப்படுகிறது.
(மேலும் அதிகரித்தும் இருக்கலாம்)
மொத்தத்தில் அன்ராய்டு வெற்றி பெற்றுவிட்டது. அப்படித்தானே??
Previous
Next Post »

2 comments

Write comments
அரவிந்தன்
AUTHOR
September 5, 2011 at 7:41 AM delete

innum konjam eluthi irukkalame

Reply
avatar