செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!


இன்னிக்கி செல்போன் இல்லாம யாரும் இல்ல!
தலகாணி வைச்சி தூங்கறாங்களோ இல்லையோ செல்போன் வைச்சி தூங்குறாங்க!
சாப்பிடுறாங்களோ இல்லையோ ரீசார்ஜ் பண்றாங்க! டாப் அப் பண்றாங்க!
மொத்தத்துல மூன்றாவது கை யா என்னேரமும் ஒட்டிகிட்டே இருக்கு.

ஆண்டுக்கு ஒரு செல்போன்.
மாதத்துக்கு ஒரு நெம்பர்
ஒரு நாளைக்கு ஒரு பிளான்
ஒரு நிமிடத்துக்கு ஒரு மெசேஜ்
ஒரு நொடிக்கு ஒரு பைசா னு
போன் கூடவே காலத்த ஓட்டுறோம்.

இப்படிப்பட்ட அருமை பெருமை வாய்ந்த கைபேசியை தேர்ந்தெடுக்க வழி சொல்றேன் வாங்க!
முதலில்

மொபைல் போன் பேசும் நேரம். 


ஒரு மொபைல் போன் வாங்கும்போது அது பேசுவதற்கு பேட்டரி நிற்கும் நேரம் பார்த்து வாங்க வேண்டும். பெரும்பாலும் நாம் மொபைல் ஸ்டாண்ட் பை மோட்'ல் எவ்வளவு நேரம் நிற்கும் என பார்த்து வாங்குகின்றோம்.

அதனால் அது நாம் தொடர்ச்சியாக பேசும் போது எகிறிவிடுகிறது. பொதுவாக பேசும் போது 5 மணிநேரங்களுக்கு மேல் தாங்கும் மொபைல்களை வாங்குவதே சிறந்தது.

அடுத்து


பேட்டரி தாங்குதிறன்

பொதுவாக பேசும் போதும், இணையத்தில் உலாவும் போதும் தான் பேட்டரி சீக்கிரம் திர்ந்து விடுகிறது. இதனை பார்த்து வாங்குவது சிறந்தது. மொபைல் போன் பேட்டரிகள் எம்.எச்.இசட் கொண்டு அளவிடப்படுகிறது. 1000 எம்.எச்.இசட் அளவுக்கு மேலே உள்ள பேட்டரி வாங்குவது சால சிறந்தது.

முக்கியமான மேட்டர்

நினைவகம்

செல்பேசிகளுக்கு மைய நினைவகமும், நினைவக அட்டையும் சேமிக்க பயன்படுகிறது. நினைவக அட்டை தான் பாடல்களையும், விடியோக்களையும் தாங்கி கொள்கிறது. 8 ஜிபி அளவினை தாங்ககூடிய மொபைல் ஆக இருந்தால் நலம்.

எப்போவாது ஒன்னுதான் வாங்குறோம், வாங்குறதா நல்லதா வாங்குனா என்னனு 15,000 ருபாய்க்கு 20,000 ருபாய் வாங்கி எப்படி பயன்படுத்துறது னு என்ன மாதிரி முழிக்காதீங்க! (பிளாக்பெர்ரி ஓசில கிடைச்சுது, ஒன்னுமே தெர்ல பாஸ்)

டச்ஸ்கீரீன் வானாம் நைனா! பிகாஸ் கீழ விழுந்தா பட்டுனு டமால் ஆகிடும். (நம்புள்து கூட அப்படித்தான் பூட்சுபா)

டச்ஸ்கிரீன் இருந்தா மெசேஸ் அனுப்ப கஸ்டமா இருக்கும்.நோக்கியா போன்'ல நிறைய சாப்ட்வேர் ரிப்பேர் வருது. அதனால அந்த பிராண்டு கொஞ்சம் தவிர்க்கலாம். (நோக்கியா மன்னிக்கவும்)ஸ்மார்ட் போன் வாங்குபவர்கள் நம்ம அண்ட்ராய்டு போன்கள் தேர்ந்தெடுங்கள். நல்லா கீது பா. (சிம்பியன் ஹேங் ஆகும், காசு இருந்தா ரிம் வாங்கலாம்)

முன்னனி மொபைல் போன் பிராண்டுகள்

 முன்னனி மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம்கள்
Previous
Next Post »

4 comments

Write comments
September 3, 2011 at 9:07 AM delete

அண்ணா, வணக்கமுங்கனா, நல்ல பயனுள்ள தகவளுங்க்னா.

Reply
avatar
September 3, 2011 at 9:12 AM delete

நன்றிங்க! ​தொடர்ச்சியா வாங்க அப்பூ!

Reply
avatar
September 3, 2011 at 9:34 AM delete

thanks dear friendthanks dear friend

Reply
avatar
siga.lenin
AUTHOR
December 27, 2011 at 8:19 AM delete

அருமையான தகவல் மிக்க மகிழ்ச்சி இருப்பினும் செல்போன் பயன்பாட்டின்போது ஒவ்வொரு கம்பெனி செல்லுக்கும் கதிர்வீச்சு அளவு எவ்வளது அதன் பாதிப்பு அளவு என்ன என்பதை விபரமாக தகவல் தந்தால் மிக்க மகிழ்ச்சி

Reply
avatar