அழிந்து விட்டதா பி.எஸ்.என்.எல்??

இந்தியாவின் மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனம் இக்கட்டில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது.
1. பழமையான பெரிய தொலைதொடர்பு நிறுவனம்.
2. குக்கிராமத்தில் கூட ஏதாவது ஒரு சேவை அளிக்கிறது. (சிட்டி தான்டினால் பல நிறுவனங்கள் சேவை கிடைப்பதில்லை)
3. 95 சதவீதம் தரைவழி இணைப்புகளை வழங்கும் தரைவழி இணைப்பின் மன்னர்.
4. 60 சதவீதம் ஐபி சேவைகள் வழங்குகிறது.

இத்தனை சிறப்புகளை உடைய பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் சுருக்கமாக பிஎஸ்என்எல் என அறியப்படுகிறது. இது அரசுடமை என்பதால் அரசியல்வாதிகள் சம்பாதிக்கும் இடமாக மாறி தற்போது எல்லாவற்றையும் இழந்து விட்டது. ஆசியாவின் பெரிய ஊழல், தனியார் நிறுவனங்களின் போட்டிகள், அதிகாரிகளின் மெத்தனம் ஆகியவற்றின் காரணமாக 2 வது இடத்தில் இருந்து அதளபாதாளத்தில் வீழ்ந்து விட்டது. நிறைய வாடிக்கையாளர்களை இழந்து விட்டது. கிட்டத்தட்ட நிலைமை கைமீறி போனஉடன் தான் விழித்துள்ளது.

தற்போது மராமத்து பணிகளை துவக்கி உள்ளது.

செல்பேசி கட்டணங்கள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அகண்ட வரிசை இணைப்புகள் கேட்டவுடன் டெப்பாசிட் இன்றி அளிக்கப்படுகிறது.

இணைப்புகளின் பழுதை நீக்கும் பணியும் தற்போது போதிய வேகத்தில் நடைபெறுகிறது.


கட்டண உயர்வின்றி பி.எஸ்.என்.எல் தனது வாடிக்கையாளர்களுக்கு அகண்ட வரிசை இணைப்புகளின் வேகத்தை உயர்த்தியுளளது. (இதானே நமக்கு முக்கியம்)
முன்பு 750 ருபாய்க்கு 256 கே.பி.பி,எஸ் வேகம் கிடைத்தது. தற்போது அதே கட்டணத்தில் 512 கே.பி.பி.எஸ் வேகம் கிடைக்கிறது.


ஆக மொத்தம் பி.எஸ்.என்.எல் மாறி விட்டது.நம்மளாள முடிஞ்ச ஏதும் அதற்கு செய்யும் எண்ணத்தில் தனியார் இணைய இணைப்பை கட் செய்து விட்டு பிஎஸ்என்எல் இணைப்பு வாங்கிஉள்ளேன். ஏதோ என்னால முடிஞ்சது. நீங்களும் பிஎஸ்என்எல் கு உதவுங்கள்.

Previous
Next Post »

2 comments

Write comments
September 2, 2011 at 2:14 AM delete

நான் பயன்படுத்துவதும் பிஎஸெனெல் தான்

Reply
avatar
rajan
AUTHOR
September 4, 2011 at 7:26 PM delete

naanum bsnl than anal 512 kbs speed muluvathum kidaikjavillai kuraivahathan erukirathu 750 planuku 1mpbs speed koduthal nalla erukum valha bsnl

Reply
avatar