china mobiles secret codes


சீனா தன் அந்நிய முதலீட்டின் மூலம் கொள்ளை லாபம் அடித்துவருகிறது வளரும் நாடுகளை குறிவைத்து.  இந்தியா உலகிலேயே இரண்டாவது மக்கள் தொகை நெருக்கம் கொண்ட நாடு என்பதால் தன் சிறு தொழில்களின் பெருமுதலீடுகளை சீப்பு சோப்பு முதல் தகவல் தொழில் நுட்பத்தின் தற்கால அதிசயமாக உலவிவரும் I pod வரையில் இந்திய சந்தையில் உலவ விட்டிருக்கிறது.  இந்தியாவின் பொருளாதாரத்தினை சீர்குலைப்பதோ அல்லது சீனா தன் பொருளாதாரத்தினை சீர்படுத்தி - (ஏற்கனவே பணக்கார நாடு) கொள்வதற்கோ என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்க நம் நாட்டுப் பொருட்களை வாங்காமல் பிறநாட்டு பொருட்களை வாங்கி உலகமயமாக்கலில் தன்னை பலிகடாவாக்கிக் கொண்டிருக்கிறோம் நாம்!


உலகின் அழகியாக தொடர்ச்சியாக ஜஸ்வர்யா ராயும் பிரியங்கா சோப்ராவும் தேர்வு செய்யப்பட்டது இந்திய சந்தைகளை குறிவைத்து குப்பனும் பொட்டம்மாளும் அழகு குப்பைகளை அடுக்கி வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்பது ஒருபக்கம் என்றால் இத்தகைய விவரங்களை அறியாமல் நாம் அந்நிய பொருட்களை வாங்கி நம்மை நாமே இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு மற்றுமொரு காரணம் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்பப்பிரிவுகளிலும் சிறுதொழில்களில் பெருதொழில்கள் என்று கூறும் முதலாளி வர்கத்தினரை ஒழிக்கும் கம்யூனிச திட்டங்களிலும் இந்தியா இன்னும் காலே முதலில் கண்ணே வைக்க வில்லை என்பதுதான்.

அரசியல் வாதிகள் தங்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதால் பூதாகரமான இந்த விஷயங்கள் அவர்களின் கண்ணுக்கே படுவதில்லை விளைவு மதிப்புற்ற மக்கள் சக்தி வீணடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது நம் நாட்டில்.

இவ்வாறு வீணடிப்பதில் தங்கள் பங்கினை செலுத்திக்கொண்டிருக்கும் சைனா மொபைல் உபயோபிப்பாளர்களுக்கு பயன்படும்படியான குறியீடுகள் தான் இங்கு இடம் பெற்றுள்ளன. சீன மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள்:
  
 • Default user code: 1122, 3344, 1234, 5678
 • Engineer mode: *#110*01#
 • Factory mode: *#987#
 • Enable COM port: *#110*01# -> Device -> Set UART -> PS Config -> UART1/115200
 • Restore factory settings: *#987*99#
 • LCD contrast: *#369#
 • Software version: *#800#
 • Software version: *#900#
 • Set default language: *#0000# Send
 • Set English language: *#0044# Send
 • Set English language (new firmware): *#001# Send
 • GM208 (Chinese Nokea 6230+) engineering menu: *#66*#
 • Set Engineer Mode *888*888#
 • Set Engineer Mode *#3646633#
 • Set Engineer Mode ***503#
Codes to Change Screen Language:
 • Set Default Language :  *#0000# + Send 
 • Set Language to Russian:  *#0007# + Send 
 • Set Language to French:  *#0033# + Send 
 • Set Language to Spanish:  *#0034# + Send 
 • Set Language to Italian:  *#0039# + Send
 • Set Language to English:  *#0044# + Send 
 • Set Language to German:  *#0049# + Send
 • Set Language to Thai:  *#0066# + Send
 • Set Language to Vietnamese:  *#0084# + Send
 • Set Language to Arabic:  *#0966# + Send
Codes for Reset Mobile Factory Settings
 • *#987*99#
 • *#77218114#
 • *#881188#
 • *#94267357#
 • *#9426*357#
 • *#19912006#
 • *#118811#
 • *#3646633#
 • *#6804#
   குறிப்பு : சைனா மொபைல்கள்  ஒவ்வென்றும் ஒவ்வொரு பண்பு நலன்களை கொண்டிருப்பதால் இது அனைத்து மொபைல்களுக்கும் பொருந்தாது என்பது கருத்தினில் கொள்ளப்பட வேண்டியதாக உள்ளது.. 

Previous
Next Post »

8 comments

Write comments
August 31, 2011 at 12:55 AM delete

வணக்கம் நண்பா, இந்தப் பதிவினை ஏற்கனவே மூன்று நட்களுக்கு முன்பதாக வந்தேமாதரம் சசி அவர்கள் தன் சொந்தப் படைப்பாக வெளியிட்டுள்ளாரே.
http://www.vandhemadharam.com/2011/08/secret-codes-for-all-china-mobiles.html

Reply
avatar
August 31, 2011 at 1:16 AM delete

Mannikka Vendugirom.. Thodar Pathivar Seitha Thavaru. Inaippu Kodukkappattu Ullathu. thavarukku Varunthugiren.

Reply
avatar
Anonymous
AUTHOR
August 31, 2011 at 1:48 AM delete

உண்மைதான் நருபன் அவர்கள் குறிப்பிட்ட அந்த பக்கத்திலிருந்துதான் இந்த தகவலானது பெறப்பட்டது... தகவல் தொழில்நுட்பம் சார்ந்த செய்திகள் ஒரு தனிநபரின் எண்ணத்தில் தானாக விளையாது... மற்றவரின் கண்டுபிடிப்பினைதான் வெளிபடுத்த முடியும் என்பதால்.. தவறு இருப்பின் அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Reply
avatar
August 31, 2011 at 2:24 AM delete

நண்பரே உண்மைதான் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து தான் எழுதவேண்டும் என்று சொன்னால் google தவிர வேற யாரும் எழுத முடியாது. ஆனால் நீங்கள் ஒருவரின் உழைப்பை காப்பி செய்து உள்ளீர்கள் அது தான் தவறு நீங்கள் உட்கருவை மட்டும் எடுத்து கொண்டு உங்கள் ஸ்டைலில் எழுதி பதிவு போட்டு இருந்தால் எந்த தவறும் இல்லை ஆனால் ஒரு எழுத்து கூட விடாமல் ஒட்டு மொத்த பதிவையும் காப்பி செய்தது தான் தவறு.

இந்த பதிவை நீங்கள் அழித்து விடவேண்டும் என்று நான் கூறவில்லை. உங்கள் நலனுக்காவே கூறுகிறேன். காப்பி&பேஸ்ட் பதிவர் என்று ஒருமுறை முத்திரையை வாங்கிவிட்டால் அவ்வளவு தான் பதிவுலகில் ஜொலிப்பது கடினம் பிறகு நீங்கள் சொந்தமாக எழுதினாலும் காப்பி பேஸ்ட் என்று நினைத்து உங்கள் பதிவுக்கு ஒருவர் கூட வரமாட்டார்கள்.

ஆகவே நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் நலனுக்காகவும் நம் பதிவுலகின் நலனுக்காகவும் இதை கூறுகிறேன்.

Reply
avatar
August 31, 2011 at 3:04 AM delete

வேண்டாம் நண்பரே இந்த விபரீத விளையாட்டு
தேவையில்லாமல் உங்களின் மேலான வாசகர் வட்டத்தை இழக்ககூடும்

தயவு செய்து இந்த பதிவை மாற்றி விடுங்கள்..

நட்புடன்
சம்பத்குமார்

Reply
avatar
August 31, 2011 at 4:15 AM delete

Melana Karuthukkalukku Nantri. ini thavaru Neramal Parthukkolgirom.

Reply
avatar
August 31, 2011 at 5:50 AM delete

இந்தளவு போதுமா!

Reply
avatar