குறுஞ்செய்தி

 
செல்போன் மனிதனின் 3 வது கை ஆகி விட்டது,
அதிலும் குறுஞ்செய்தி இல்லாமல் இன்று நாம் யாருமே கிடையாது.


காலையில் எழுந்ததும் கை தானாக தேடி பிடித்து மணி என்ன? என பார்க்கிறது.
மணி பார்த்ததும் அடித்து பிடித்து எழுந்து சராசரி வேலைகளை பார்க்க வேண்டியதாகிறது,
காலை வணக்கம்! இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் என்ற வாழ்த்துக்களோடு தொடங்கிறது.

இடையே மச்சி ! கிளம்பிட்டியா?, பஸ் கேட்ச் பண்ணிடேன்டா? போன்ற அப்டேட்களும் உண்டு.

பெண் நண்பர்களுடைய சாப்டியா ? போன்ற அக்கறையான விசாரிப்புகளுக்கு நடுவே அரை நாள் ஓடிப்போகிறது.

பூ பூவாய் கரடி பொம்மை வைத்து மதிய வணக்கம் !

டீ கப்புகளோடு மாலை வணக்கம் !
அல்லது சின்னதாய் ஒரு கவிதையோடு மாலை வணக்கம்!

அதற்கு அப்புறம் தான் வேலையே,

குவாட்டர் பிதற்றல், தத்துவங்கள், கவிதைகள் என பல நேரங்களில் வெத்தாகவும்,
சில நேரங்களில் சில கெத்தான செய்திகளும் கண்ணில் படுகின்றன.

இறுதியாக இரவு வணக்கம் சொல்லி விடைபெறும் போது இரவு மணி 12 ஐ தாண்டி இருக்கும்.

இதெல்லாம் "ஊருக்கு போனவன், இன்னும் ஒரு லட்டர் கூட போடல. என்ன சங்கதியோ!" என புலம்பும் எங்க பாட்டிக்கு எப்படி புரிய வைப்பேன்??


Previous
Next Post »

2 comments

Write comments